நல்லதைச் செய்து கொண்டே இருங்கள்

சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(மத்தேயு 10:42)

ஒருமுறை செருப்புத் தொழிலாளி ஒருவர் இயேசு மறுநாள் தனது கடைக்கு வருவார் என்று கனவு கண்டார். அது அவருக்கு நிஜமாகத் தோன்றியதால், அவர் இயேசுவின் வருகைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தார். ஒரு ஏழை முதியவர் அவருடைய கடைக்கு வந்து, வெளியில் கடும் குளிராக இருந்ததால், அவர் கடையில் சிறிது நேரம் உட்காரலாமா என்று கேட்டார். செருப்புத் தொழிலாளி அவரை உட்கார வைத்து, அவரது கிழிந்த காலணிகளைக் கவனித்தார். அவருக்கு ஒரு ஜோடி புதிய காலணிகளைக் கொடுத்தார், முதியவர் மகிழ்ச்சியுடன் சென்றார். அப்போது ஒரு குழந்தையுடன் மிகவும் பலவீனமான ஒரு பெண் அவரது கடையின் முன் நின்று உணவு கேட்டார். செருப்புத் தொழிலாளி அந்தப் பெண்ணுக்கு நல்ல உணவைக் கொடுத்தார். அன்னாருடைய கண்கள் பிரகாசமாகி, அவருடைய கருணைக்கு  நன்றி கூறினார். அப்போது, மாலையில், வீட்டுக்குச் செல்லும் வழி தவறிய சிறுவன் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். செருப்புத் தொழிலாளி அநதச் சிறுவனுக்கு  இனிப்புகளை அளித்து, அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இயேசு வராததால் செருப்புத் தொழிலாளி மிகவும் ஏமாற்றமடைந்தார். அவர் நிமிர்ந்து பார்த்து, “என் இறைவா! இயேசுவே, நீங்கள் ஏன் என் கடைக்கு வரவில்லை?” என்றார். இயேசு அவனது கடைக்கு மூன்று முறை சென்று, தேவையுடைய மக்களுக்கு அவர் தன்னலமற்ற சேவைகளுக்காக அவரைப் பாராட்டினார் என்று பதிலளித்தார். அந்தச் சமயத்தில், “மிகச் சிறியவர்களாகிய என்னுடைய இந்தச் சகோதரர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத்தேயு 25:40) என்று இயேசு சொன்னதை அவர் நினைவு கூர்ந்தார். நாம் கர்த்தரை எவ்வளவு நேசிக்கிறோம், என்பதை மற்றவர்களை எவ்வளவு நன்றாக நடத்துகிறோம் என்பதன் மூலம் அளவிட முடியும். நாம் செய்யும் அல்லது செய்யாத ஒவ்வொரு நல்ல செயலையும் கர்த்தர் கவனிக்கிறார்.

“அன்புள்ள ஆண்டவரே, மற்றவர்களைக் கவனிப்பதில் எங்களுடைய  தனிப்பட்ட ஈடுபாட்டை  நீர் எதிர்பார்க்கிறீர். இன்று நாங்கள் சந்திக்கும் நபர்களுக்கு நாங்கள் கனிவாகவும் நல்ல செயல்களைச் செய்யக் கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன் பிதாவே”- ஆமென்.

Leave a comment